தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல என கூறினார்.
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கான சாத்தியக்கூறு தொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
நிகழாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பின்னடைவை சந்தித்தாலும் பாஜக வாக்குவங்கி 11.3 சதவீதமாக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் அமெரிக்காவில் ராகுல் காந்தி, இந்தியா குறித்து அவதூறுாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், தாம் என்ன பேசினாலும் எளிதில் தப்பிவிடலாம் என்ற நினைப்பில் பொறுப்பற்ற முறையில் ராகுல் காந்தி செயல்படுவதாக விமர்சித்தார்.