மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வி.கே.சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் வந்ததாகவும், திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே வருவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக தெரிவித்த சசிகலா, காரில் வந்து ஆடு திருடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் திமுகவை கடுமையாக சாடினார்.
அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் கட்சியை ஒன்றிணைத்து அடுத்து வரும் தேர்தலின் மூலம் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பேன் எனவும் சசிகலா தெரிவித்தார்.