நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவது வாக்காளர்களுக்கு வசதியான சூழலை உருவாக்கித் தருகிறது. அதிகளவிலான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள் பயணங்களால் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதால் அரசு நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்ததற்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் உருவாகும் நிச்சயமற்ற சூழல் தவிர்க்கப்பட்டு, கொள்கை முடிவெடுப்பதில் உறுதியான சூழல் உருவாகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
பல்வேறு காலகட்டங்களில் நடைபெறும் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதால் நிதிச்சுமை வெகுவாக குறையும் என கருதப்படுகிறது.
அரசு நிர்வாகம் தடையின்றி இயங்குவதோடு, பொதுமக்களுக்கு சீரான சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
தேர்தல் தொடர்பான குற்றங்களை குறைப்பதோடு, அது தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் குறையும் என்பதால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமாகிறது.
அரசியல் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களின் பணிச்சுமை குறைய வழிவகுக்கும்
என்பதோடு, ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் சமூக ஒற்றுமையின்மை மற்றும் மோதல்களை தவிர்க்க உதவும் என ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.