கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் கருணைத் தொகையாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட 23 மாணவிகளில் இருவருக்கு கருணைத்தொகையாக தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.