லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சரக்கு மற்றும் பயணிகள் விமானங்களில் பேஜர்கள் மற்றும் வாக்கி -டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
லெபனான் குடியரசின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு செயல்பாட்டில் இருக்கும் எனவும் கத்தார் ஏர்வேஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் பேஜர் தாக்குதலால் 32 பேர் உயிரிழந்த நிலையில், 3000 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.