தவெக-வின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரி மாதத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து, கடந்த மாதம் கட்சியின் கொடி மற்றும் பாடலை சென்னையில் அறிமுகப்படுத்திய அவர், தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தேதியில் மாற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக-வின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி மாலை 4 மணி அளவில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.