அதிகரிக்கும் பணிச்சுமை - மாரடைப்பால் இளம் பெண் மரணம் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் பணிச்சுமை – மாரடைப்பால் இளம் பெண் மரணம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 08:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிக பணிச்சுமையால் இளம் ஆடிட்டர் மரணமடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் முன்னணி தணிக்கை நிறுவனமாகக் கருதப்படும் ERNST & YOUNG-இல் கணக்கு தணிக்கையாளராகப் பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியன், கடந்த ஜூலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 26 வயது இளம்பெண் மாரடைப்பால் மரணமடைவது சாதாரண விஷயம் அல்ல.

மார்ச் மாதம் பணியில் சேர்ந்த அன்னா, நான்கே மாதங்களில் உயிரிழக்க பணிச்சுமையே காரணம் என்று கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் அன்னா செபாஸ்டியன்.

அவரது உயிரிழப்பு தொடர்பாக EY நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மெமானிக்கு அன்னாவின் தாய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “அன்னாவின் முதல் பணி இது. ஆனால் 4 மாதங்களிலேயே  பணிச்சுமையால் உயிரிழந்துவிட்டார்.

அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேலாளருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது குழந்தையின் உயிரிழப்பு நிறுவனத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என, தமது வேதனையைத் தெரிவித்திருந்தார்.

அந்தக் கடிதம் இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அதற்கு ராஜீவ் மெமானி பதிலளித்தார். ”இதுபோன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். ஒரு தந்தையாக அவர்களின் துயரத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றாலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்துகிறேன். இது நமது கலாசாரத்திற்கு எதிரானது. இதற்குமுன் இவ்வாறு நடந்ததில்லை. இனி ஒருபோதும் நடக்காது. EY நிறுவனத்தில் ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே அன்னா செபாஸ்டியனின் பெற்றோர் தெரிவித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என அன்னாவின் தந்தை சிபி ஜோசப்பும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரும் வலியுறுத்தியுள்ளனர். ப

ணி நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்றும், ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம் என்று வரைமுறைப்படுத்த வேண்டும் என சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

Tags: Rajiv MemaniERNST & YOUNGleading international auditing firmAnna Sebastian death issueheavy workload
Share
Tweet
SendShare
Previous Post

ஈசன் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயில் – சிறப்பு தொகுப்பு!

Next Post

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் – சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies