ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவின் மரணத்தை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த ஏவுகணை தளங்கள், ஆயுத கிடங்குகள், ஹிஸ்புல்லா உட்கட்டமைப்புகளை குறிவைத்து விமானப் படை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவின் மரணத்தை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அதில், நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு போரை ஏன் நீட்டிக்க வேண்டும் என்றும், போரை தவிர்க்குமாறும் நெதன்யாகுவிடம் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நஸ்ரல்லா இறந்தது, அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நீதிக்கான ஒரு நடவடிக்கை எனக் கூறியுள்ளார். மேலும், நஸ்ரல்லாவால் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.