இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கிழக்கு மோதல்கள் விரிவடைவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முற்றிலும் போர் நிறுத்தம் தேவை என்றும், லெபனானில் மோதல்கள் தீவிரமடைந்து வருவது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.