பாலி மற்றும் மராத்தி ஆகியவை செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து புத்த துறவிகள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது பிரதமர் மோடியை பாராட்டும் விதமாக பாலி மொழியில் சுலோகங்களை பெளத்த மத துறவிகள் ஓதினர். முன்னதாக, ஜன சங்கக் காலத்திலிருந்து பாஜகவுக்கு தொண்டாற்றி வரும் மூத்த பெண் நிர்வாகியை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.