இலங்கையின் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரை கடலில் நீந்தி ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் 12 வயது மகன் லக்சய், ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர் நீச்சலில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் நிலையில், மற்றொரு சாதனை முயற்சியாக இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சிறுவன் லக்சய் உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் சென்ற நிலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி சிறுவன் லக்சய் உலக சாதனை படைத்துள்ளார்.
சிறுவனின் சாதனை பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், பெற்றோர் உட்பட அனைவரும் மகிழ்ச்சி பொங்க சிறுவனை பாராட்டினார். மேலும், சிறுவனின் சாகச நிகழ்வை World Book of Record அமைப்பு அங்கீகரித்துள்ளது.