அரசு உதவ கோரிக்கை! : நலிவடைந்து வரும் அரிவாள் தயாரிப்பு!
Aug 8, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு உதவ கோரிக்கை! : நலிவடைந்து வரும் அரிவாள் தயாரிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அறுவடைக் கருவிகளில் மிகப்பழமையான கருவி என்றால் அது அரிவாள் தான். தற்போது நலிவடைந்து வரும் அந்த அரிவாள் தயாரிப்பு தொழிலை காக்க வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு..!

மனித வரலாற்றில் உலோகங்களின் வருகைக்கு முன்பு வரை கல் கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு மனித நாகரீக வளர்ச்சியின் முதல் படியாக உலோகங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இரும்பினாலான கருவிகளே இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் அறுவடைக் கருவிகளில் மிகவும் பழமையான ஒன்று, என்றால் அது அரிவாள் தான். உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரிவாள்கள் தோட்டக்கலை கருவிகளில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களில் உள்ள வீடுகளில் கூட அரிவாள்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. விவசாயம் முதல் இறை வழிபாடு வரை முக்கிய இடத்தில் உள்ள இந்த அரிவாள்களை சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக இன்றளவும் தயாரித்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தென்கரை என்ற சிறு கிராமத்தில் 100 வருடங்களுக்கும் மேலாக, தங்களது குடும்பத் தொழிலாக 20 தொழிலாளர்கள் அரிவாள்களை தயாரித்து வருகின்றனர். இந்த ஊரில் ஒரு அடி முதல் 18 அடி வரையிலான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. விறகு வெட்ட பயன்படக்கூடிய அரிவாள்கள், இளநீர் வெட்டும் அரிவாள்கள், விவசாய பணிகளுக்கான அரிவாள்கள், வாங்கு அரிவாள்கள், சாமிக்கு நேர்த்திக்கடன் அரிவாள்கள், கருக்கரிவாள்கள், சூலாயுதம், உள்ளிட்ட ஆயுதங்கள் இந்த கிராமத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், ஓலைக்குடிப்பட்டி, மருதிப்பட்டி, அரண்மனை சிறுவயல், முப்பையூர் என சுற்றுவட்டார பகுதிகளில் அரிவாள்கள் தயாரிக்கும் தொழில்கள் நடைபெற்று வந்தாலும், தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் தரம் குறையாமல் உழைக்கக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், விவசாய வேலைக்கு இங்கு வாங்கும் அரிவாள்களே தரமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் 15 வருடங்கள் வரை உழைக்கக்கூடியது என்றும், கனரக வாகனங்களுக்கு அடியில் பொருத்தப்படக்கூடிய உருக்கு பட்டைகளை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர் அரிவாள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள்.

மூலதனப் பொருட்களின் விலையேற்றத்தால் தற்போது தொழில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள், உடல் உழைப்பை மிகவும் அதிகமாக கொடுக்கக்கூடிய கடினமான தொழிலாக இருப்பதால் வேலை ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு, தொழில் நலிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அறுவடை கருவிகளில் மிகவும் பழமையான அரிவாள்களை காக்க வேண்டுமென்றால் அந்த தொழில் செய்யும் உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Tags: Request to help the government! : Declining scythe production!
Share
Tweet
SendShare
Previous Post

முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதுகட்டு விழா கோலாகலம்!

Next Post

ரத்தன் டாடா மறைவு! – பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies