ராமநாதபுரம் மாவட்டம் தோப்படைப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதுகட்டு விழா நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர்.
அப்போது மழை பெய்ய தொடங்கியதால் மைதானத்தை தார்ப்பாய் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூடினர். பின்னர் மழை நின்றதும் மீண்டும் வீரர்களை காளையை அடக்கினர்.