நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மது கோடா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மது கோடா ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், கொல்கத்தாவை சேர்ந்த நிலக்கரி நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில், தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.