ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நொடிகள் தொடர்பான டிரோன் கேமரா வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் யாஹ்யா சின்வார் கீழே விழுந்து கிடப்பதும், அருகிலிருந்த பொருளை தூக்கி டிரோனை நோக்கி எரிவதும் இடம்பெற்றுள்ளது.
யாஹ்யா சின்வாரின் உயிரிழப்பால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.