இந்தியாவிலிருந்து 50 ஆண்டுகளாக தமிழகத்தை பிரிக்க முயற்சி நடைபெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தூர்தர்ஷன் பொன் விழா ஆண்டையொட்டி, சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அந்தத் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பங்கேற்றார்.
அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டியவை என்றும், தமிழக மக்களிடையே இந்தி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மேலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்று கூறிய அவர், இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பலமுறை முயற்சி நடந்ததாகவும், அந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.