சென்னை எழும்பூரில் நடைபெற்ற பாஜக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு பூஜை செய்து ஆட்டோ ஓட்டுநர்கள் வழிபட்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பட்டாசு வெடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்.முருகன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.