சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அடுத்த கல்லல் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை சோதனை செய்ததில் அதில் சில நகைகள் போலி என தெரியவந்தது.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியின் மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடரந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.