தீபாவளியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையாகின.
சாதாரண நாட்களில் ஆயிரத்திற்கும் குறைவான ஆடு, கோழிகளே விற்பனையாகும் நிலையில், தீபாவளி என்பதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனையாகின. சந்தையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.