கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கினார். இதில், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்தஸ்ரீ துளிப்புடி பண்டிட் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதனைதொடர்ந்து கொடைக்கானல் சங்கரா வித்யாலயா பள்ளி மாணவர்களிடம் உரையாடிய ஆளுநர், தமது தாயின் கஷ்டங்களை பார்த்து இந்த நிலைக்கு வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.