குன்னூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறை விழுந்துள்ளதால் உதகை மலை ரயில் சேவை பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், ஹில்க்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தண்டவாளத்தில் விழுந்த பாறை உடைக்கப்பட்ட பின்னரே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.