தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர்.
சீர்காழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது வாகனத்தில் இருந்த பார்த்திபன், ராகவன் ஆகிய இருவரும் சந்தேகத்திற்குரிய வகையில் பதிலளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், வேலைக்கு செல்லாமல் இருசக்கர வாகன திருட்டில் இருவரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.