தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நாளை, நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்றும், அதற்கு மறுநாளும் விடுமுறை நாள் அட்டவணையின்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.