உண்மையான ஹீரோ - PHANTOM, ராணுவ செல்லப்பிராணியின் உயிர் தியாகம் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உண்மையான ஹீரோ – PHANTOM, ராணுவ செல்லப்பிராணியின் உயிர் தியாகம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு, இந்திய ராணுவ நாய் Phantom வீரமரணம் அடைந்துள்ளது. தேசத்திற்கு சேவை செய்யும் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த Phantom பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியான ஒயிட் நைட் கார்ப்ஸின் முக்கிய உறுப்பினராக பல வீரநாய்கள், தேசப் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன.

அதில், K9 பாரா சிறப்புப் படையில் Phantom என பெயரிடப்பட்ட வீர நாய், முக்கியமான இராணுவ நாயாக இருந்தது. நான்கு வயதுடைய இந்த இராணுவ நாய் பெல்ஜிய மாலினோயிஸ் இனத்தைச் சேர்ந்ததாகும். அச்சமின்றி சண்டையிடுவதிலும், தீவிரவாதிகளின் மறைவிடங்களைத் துல்லியமாக கண்டுபிடிப்பதிலும் அதீத திறமை கொண்டதாக Phantom விளங்கியது.

2020ம் ஆண்டு மே 25ம் தேதி Phantom நாய் பிறந்தது. மீரட்டில் உள்ள ரீமவுண்ட் கால்நடை மருத்துவப் படையில் பயிற்சி பெற்றது.பின்னர், Phantom, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி தீவிரவாத எதிர்ப்புப் படையில் இணைந்தது. தைரியம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை Phantom வீர நாயின் சிறப்புக்களாகும்.

கடந்த சில மாதங்களாகவே, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சுந்தர்பானி செக்டரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அக்னூர் பகுதியின் அசன் கோவில் அருகே, தீவிரவாதிகள், ராணுவ ஆம்புலன்ஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க உடனடியாக தீவிரதேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேசப் பணியில் இருந்த வீரமிக்க ராணுவ நாய் Phantom தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தது.

வீரமரணம் அடைந்த Phantom நாய்க்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், அதன் முன்மாதிரியான துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளது.

வீரம் மிக்க இந்திய இராணுவ நாய் Phantom ஒரு உண்மையான ஹீரோ என்றும், அதன் உயர்ந்த தியாகத்தை வணங்குவதாகவும், தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, 2023ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், 21வது ராணுவ படை பிரிவைச் சேர்ந்த கென்ட் என்ற ஆறு வயதான ராணுவ நாய் வீர மரணம் அடைந்தது. கென்ட் பெண் லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்ததாகும். தனது பயிற்சியாளரைத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்ற நிலையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு கென்ட் உயிரை விட்டது குறிப்பிடத் தக்கது.

அக்னூரில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags: VeeranayaksWhite Knight Corpsammu and KashmirPhantom sacrificed lifeIndian army dog ​​PhantomIndian army dog ​​
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகள் செய்து தரவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

Next Post

அயோத்தியில் தீப உற்சவம் – 25 லட்சத்திற்கு மேற்பட்ட தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies