தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் — ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 12 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாத படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவினர் மீதும் கடுமையான வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் மீது ஈரான், 200 பாலிஸ்ட்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஈரானும் நேரடியாக இறங்கியது. ஈரானின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து, இருநாடுகளும் பதிலுக்குப் பதில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானையும், இஸ்ரேலையும் வலியுறுத்தி உள்ளன.

இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி போராக இருக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரானின் உச்சத் தலைவரின் உயர்மட்ட உதவியாளரான, முகமது முகமதி கோல்பயேகனி, இஸ்ரேலின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்த ஈரானின் வான் பாதுகாப்புச் செயல்திறனைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ,கொமேனி, இஸ்ரேல் தாக்குதல்களைப் புறக்கணிப்பது என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஈரானின் உச்சத் தலைவர்.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி படுத்தி இருக்கிறது. ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவவீரர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முதன்மையான இலக்கு என்று கூறியிருக்கிறார். மேலும்,முன்னெப்போதையும் விட இன்றைக்கு இஸ்ரேல் வலிமையாக இருப்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags: IranAir StrikeIran missile attackIsraelLebanonHamasgaza
Share
Tweet
SendShare
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் திருட்டு – இருவர் கைது!

Next Post

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies