ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களிக்குமாறு வாக்காளர்க்ளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜார்க்கண்டில் முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜார்க்கண்டில் முதற்கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் ஊழல், ஊடுருவல் இல்லாத, வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்க வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
பழங்குடியினரின் அடையாளம், நிலம், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றை பாதுகாக்க ஜார்க்கண்ட் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜார்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.