தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, திமுக அரசு தமிழ் மொழிக்கு விரோதியாக செயல்படுகிறது என்றும், கல்வி அமைச்சரின் பிள்ளையே 3-வது மொழி கற்றுக் கொள்வதாக கூறினார்.
ஏழை மாணவர்கள் 3-வது மொழி கற்றுக் கொள்ளக்கூடாது என நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு திட்டங்களுக்கு கட்சி தலைவர்களின் பெயர்களே வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசு திட்டங்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்களை வைப்பதற்கு முன்வருவதில்லை என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.