நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் அதிமுக கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தனது பணிகளை முறையாக செய்யவில்லை என கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா குற்றம் சாட்டினார். இதனால், முதலில் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, எஸ்.பி.வேலுமணி எவ்வளவோ சமாதானம் சொல்லியும், அதை அவர்கள் ஏற்க மறுத்து கைகலப்பில் ஈடுபட்டனர்.