சென்னை அருகே வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக பலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
அதில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 47 குடும்பங்களை காலி செய்யுமாறும், இவர்கள் அனைவருக்கும் பெரும்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், 47 வீடுகளை இடிக்க, போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் குவிந்தனர். அவர்களை உள்ளே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிலரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.