சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை அன்மோல் கார்பை 21க்கு 17, 21க்கு 15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.