சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசார் நன்னடத்தை பயிற்சிக்காக ஆயுதப்படைக்கு அனுப்பப்படுகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் 23 பேர், மரபை மீறி பதினெட்டாம் படி மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் 25 போலீசாரும் தாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், எந்த தண்டனையையும் ஏற்க தயாராக உள்ளதாகவும் விளக்கம் அளித்தனர் இதை தொடர்ந்து 23 பேரும் திருச்சூர் ஆயுதப்படை பயிற்சி முகாமில் நான்கு நாட்கள் நன்னடத்தை பயிற்சி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கேரளா போலீஸ் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.