எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை 4-வது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கிய உடன் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.