திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ், தமது பெற்றோர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோர், உறவினர்களுடன் வருகை தந்தார்.
பின்னர் அவர்கள் அனைவரும் விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த மாதம் கோவாவில் தமக்கு திருமணம் நடைபெற உள்ளதால் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.