ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் ரயில்வே மேம்பாலத்தின் மீது கார்களை பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
கனமழை காலத்தின்போது வேளச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலம் மீது நிற்க வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கவுள்ளதால், சென்னைக்கு அதிகனமழைக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக, வேளச்சேரி மேம்பாலம் மீது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கார் பார்க்கிங்காக மேம்பாலம் மாறியுள்ளது.
இதனிடையே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூங்கா மற்றும் கடற்கரைகள் இன்று மூடப்பட்டுள்ளன.