கனமழையால் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனின் அலுவலகம் முன் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட அனைத்து வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய சென்னை திமுக எம்.பியான தயாநிதி மாறனின் அலுவலகம் முன்பாகவும், 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.