கடலூரில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, காய்கறி கடையில் பொது மக்கள் குவிந்தனர்.
கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 7 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சூறைக்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அச்சமடைந்தனர்.
இதனால், பால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வாங்கி திரண்டனர். கடலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள காய்கறி கடையில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.