கனமழையால் சென்னை கோடம்பாக்கத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் ராயபுரம், நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், அங்குள்ள வாகனங்களும் மழைநீரில் மூழ்கியுள்ள நிலையில், குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.