கனமழையால் சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் முழங்கால் அளவு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் வேதனைக்கு ஆளாகியுள்ள வேளச்சேரி மக்கள் ஒவ்வொருவராக தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால் மழைநீர் தேங்கியிருக்காது என வேதனை தெரிவிக்கும் வேளச்சேரி மக்கள், இதுவரை குடியிருப்பு வாசிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.