இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேச இடைக்கால அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வங்கதேச இந்துக்களுக்கு உலக நாடுகளின் ஆதரவை மத்திய அரசு பெற வேண்டுமென கூறிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபாலே, வங்கதேசத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.