உச்சநீதிமன்றம் கூறியதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உச்ச நீதிமன்றம் நேரடியாக முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளதாகவும், செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கிய முதலமைச்சரின் தவறு என்றும் தெரிவித்தார்.
வழக்கில் இருந்து விடுபட்ட பின் அமைச்சராக்குவதாக தெரிவித்திருக்கலாம் எனறும், சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால்தான் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார் எனறும் அவர் கூறினார்.
முன்பு செந்தில் பாலாஜியை பழித்த முதலமைச்சர் தற்போது அவரை போற்றுவதாகவும், உச்சநீதிமன்ற கருத்தை ஏற்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறையை விட்டு வெளியே வந்ததும் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாகவும் நாராயணன் திருப்பதி கூறினார்.