திமுகவின் ஒரு பிரிவைப் போல் காவல்துறை செயல்படுவது வருந்தத்தக்கது - அண்ணாமலை
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஒரு பிரிவைப் போல் காவல்துறை செயல்படுவது வருந்தத்தக்கது – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 21, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவின் பிரிவைப் போல காவல்துறை செயல்படுவது வருந்தத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “கடந்த 16.12.2024 அன்று, வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி திரு V. விட்டல் குமார், திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையில் வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான N.பாலாசேட்டு என்ற நபருக்குத் தொடர்பிருப்பது தெரிந்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை, நேற்று நாங்கள் கண்டித்த பிறகு, இன்று திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவையும், அவரது மகனையும் கைது செய்திருக்கிறது.

ஒவ்வொரு முறை திமுகவினர் குற்றம் செய்யும்போதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியுள்ளது. பாஜகவினர் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதே தவிர, திமுகவினர் அராஜகத்துக்குத் துணை நிற்பதல்ல.

ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKtamilnadu policeTamil Nadu BJP State President AnnamalaiV. Vittal Kumar murder case
Share
Tweet
SendShare
Previous Post

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Next Post

திருப்பூர் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies