சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது என
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..
சீனாவில் HMPV எனப்படும் புதிய வைரஸ் அதிகம் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் காரணமாக காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் எனவும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், HMPV வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று கூட்டு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.. மேலும், சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது…