சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாகவும், அதிமுகவிற்கு அவப்பெயர் உருவாக்கும் நோக்கிலும் சுதாகர் செயல்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
இதனால், தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் 103 -வது வட்டச் செயலாளர் ப.சுதாகர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.