நாகலாந்து ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலன் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதுதொடர்பாக அண்ணாலை விடுத்துள்ள இரங்கல் பதிவில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன்மூத்த சகோதரர் இல. கோபாலன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். திரு. இல. கோபாலன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.