மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை கருத்தில்கொண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் ஆன்லைன் முன்பதிவு முறையில் வரும் 12ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களும், 13-ம் தேதி 50 ஆயிரம் பக்தர்களும், ஜனவரி 14-ம் மகரவிளக்கு நாளில் 40 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.