ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், 50 கிராம் தங்கம், 7 கிலோ வெள்ளி, 158 வெளிநாட்டு கரன்சிகள் கிடைக்க பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.