விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - பெண் பலி!
Nov 15, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – பெண் பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால், தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வந்த போதிலும், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் அரை மணி நேரமாக தீயை அணைக்க முடியாமல் போராடினர்.

பின்னர், ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. வெடிவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. தீக்காயங்களுடன் ராமலட்சுமி என்ற பெண் உயிரிழந்த நிலையில், ஒரு ஆண் உட்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக போர்மேன் செல்வகுமாரை போலீஸார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இதனிடையே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதேபோல பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Tags: tamil nadu governmentVirudhunagarfirecracker factory explosionKovilpuli Kuthiforeman Selvakumar arrested
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – 60.42 % வாக்குகள் பதிவு!

Next Post

போச்சம்பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies