ஆட்குறைப்பு நடவடிக்கை : 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பி அமெரிக்க அதிபர் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்குறைப்பு நடவடிக்கை : 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பி அமெரிக்க அதிபர் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க அரசு துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் பெரும்பாலானோர் செயல்திறனற்றவர்கள் என்றும், தமக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறிய ட்ரம்ப், அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போதே அறிவித்திருந்தார்.

அதிபராக வெற்றி பெற்றதும், அமெரிக்க அரசின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும்,அரசு செலவுகளைக் குறைப்பதற்கும் புதிதாக, (DOGE ) என்னும் அரசு செயல்திறன் மேம்பாட்டு துறையை உருவாக்கினார். இந்த துறையின் தலைவராக  உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.

அரசு மேற்கொள்ளும் செலவுகளைக் குறைத்தாலே, அரசின் செயல் திறன் அதிகரிக்கும் என்று நோக்கத்தில் இந்தத் துறை செயல்பட்டு வருகிறது. அதன் படி, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைக்க, பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் குறிப்பாக, உள்துறை,எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகளில் தான் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி துறையில் 2000 பேர் வரை பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அமெரிக்க உள் துறையில் தான் அதிக அளவில் பணிநீக்கங்கள் நடந்துள்ளன. சுமார் 2300 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தில் 325 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்த துறை தான், அமெரிக்காவின் தேசிய பூங்காக்கள் மற்றும் நாட்டின் பொது நிலங்களில் சுமார் 500 மில்லியன் ஏக்கர்களை நிர்வாகம் செய்கிறது.   நாட்ட்டின் கடற்கரைகள் மற்றும் கடலில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு குத்தகை திட்டங்களையும் உள்துறையே நிர்வகித்து வருகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் கோப்புக்களை ஒப்படைத்து விட்டு, அலுவலகங்களைக் காலி செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் மூலமாகவோ அல்லது குழு வீடியோ அழைப்புகள் மூலமாகவோ ஆயிரக்கணக்கான சக ஊழியர்களுக்குப் பணி நீக்க செய்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை, உரிய நடைமுறையும் இல்லை, தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எவரெட் கெல்லி கூறியிருக்கிறார்.

அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில் தேசிய பூங்கா சேவை சுமார் 1,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. வரி வசூலிக்கும் வருவாய் துறை வரும் வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக, செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில், தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனையடுத்து,சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தனர். இது மொத்த அரசு பணிகளில் 3 சதவீதமாகும்.

அமெரிக்காவின் 36 ட்ரில்லியன் டாலர் கடன் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட 1.8 ட்ரில்லியன் பண பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த நடவடிக்கை தேவையானது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Share
Tweet
SendShare
Previous Post

மோடி MIGA – ட்ரம்ப் MAGA : வெற்றியை நோக்கி MEGA கூட்டணி!

Next Post

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா – பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies