முதல்வரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - அண்ணாமலை விமர்சனம்!
Oct 17, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – அண்ணாமலை விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 2, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று முதலமைச்சர் ஸ்டாலின். நாடகமாடிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம். கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் . ஸ்டாலின்  தந்தை மறைந்த கருணாநிதி . கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?

காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக என தெரிவித்துள்ளளார்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று .ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி
அரசு.  மோடி அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள்.

அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும்  ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags: annamalaiMK Stalinkatchadeevu issue
Share
Tweet
SendShare
Previous Post

கச்சத்தீவு தீர்மானம் : திமுகவின் அரசியல் நாடகம் – எச்.ராஜா குற்றச்சாட்டு!

Next Post

நாடாளுமன்றமும் வக்ஃபு வசம் சென்றுவிடும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies