பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டை பாஜக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக குற்றம் சாட்டிய அவர், மாநில தலைவராக தனது பொறுப்பு பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என்றும் தெளிவுபடுத்தினார்.

பூத் கமிட்டியை சரி செய்தால் பாஜகவை வெல்ல யாராலும் முடியாது எனக்கூறிய அவர், இரட்டை இலையுடன் சேர்ந்து இரட்டை இலக்கத்தோடு சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தொண்டர்களுடன் பாஜகவினர் ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார்.

இதனிடையே கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில்  சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் , கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி,  மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்ததம்,  கோவை பெருங்கோட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் பூக்களை தூவியும், மேள தாளம் முழங்க அவரை வரவேற்ற பாஜகவினர், சாரட் வண்டியில் நயினார் நாகேந்திரனை அழைத்து வந்தனர்.

 

Tags: bjp leaders cellphone tappingcoimbatoreDMK governmentadmk bjp allianceBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ த்ரில் வெற்றி!

Next Post

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி – இபிஎஸ் கண்டனம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies